அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்தோனேசியா அனுமதி


அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்தோனேசியா அனுமதி
x
தினத்தந்தி 19 March 2021 11:20 AM GMT (Updated: 19 March 2021 11:27 AM GMT)

அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி விநியோகத்திற்கு இந்தோனேசியா அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.


உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும். 

இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக கூறி பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. எனினும்,  தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் செயல் திறன் மிக்கது என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.

 இதைத்தொடர்ந்து,  ஸ்பெயின் , இத்தாலி , பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கின. ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளில் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெளிவாகியிருப்பதால், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்தோனேசியாவிலும் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி விநியோகத்துக்கு அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்துள்ளது. 

Next Story