கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பால் இந்தியாவில் வறுமை அதிகரிப்பு


கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பால் இந்தியாவில் வறுமை அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 March 2021 12:12 PM GMT (Updated: 19 March 2021 12:12 PM GMT)

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பால் இந்தியாவில் வறுமை அதிகரித்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக வெளிப்பட்டது. தொற்று  பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் துவக்கத்தில் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தின. இந்த ஊரடங்கினால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவிலும் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை சுட்டிக்காட்டி பியூ நிதி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் கொரோனா பேரிடரால் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைந்து ஏழ்மையை அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையிழப்பு, வருமானம் குறைதல், அதிகரித்த விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளால் 9.9 கோடியாக இருந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 6.6 கோடியாக சுருங்கிவிட்டதாகவும் நாளொன்றுக்கு ரூ.140க்கும் குறைவாக வருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


Next Story