உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை + "||" + Australia flash floods: Homes and roads engulfed as heavy rain hits parts of New South Wales

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த  வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

வேகமாகப் பாய்ந்த வெள்ள நீர் பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியதால் சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் வாழும் மக்கள், நள்ளிரவில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கினால் பல முக்கியமான சாலைகள் மூடப்பட்டன. ஏராளமான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸின் சுமார் 13 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது. அங்கிருந்து மக்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். எதிர்பார்த்ததை விட அதிகமான மழை பெய்ததாகவும், இதனால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறி உள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் பலத்த மழை- கடும் போக்குவரத்து நெரிசல்
மும்பையில் நேற்று அதிகாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
2. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. பாகிஸ்தானில் புயலுடன் கூடிய கனமழை: 9 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் புயலுடன் கூடிய கனமழை கொட்டியது. மழை தொடர்பான சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர்.
4. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. இலங்கையில் கனமழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு: 2.71 லட்சம் பேர் பாதிப்பு
இலங்கையில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.