வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை, 15 ஆயிரம் திர்ஹாம் அபராதம் துபாய் நீதிமன்றம் உத்தரவு

வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை, 15 ஆயிரம் திர்ஹாம் அபராதம் துபாய் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 24 March 2021 7:45 PM GMT (Updated: 24 March 2021 7:45 PM GMT)

துபாயில் ஆசிய நாட்டைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வசித்து வந்தார். அவர் போதைப்பொருளை பயன்படுத்தி வருவதாகவும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அவர் வசித்து வந்த வீட்டில் அதிரடி சோதனை செய்தனர்.

துபாய்,

அப்போது அவர் போதைப்பொருளை பயன்படுத்தி வந்ததும், விற்பனையில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வர்த்தக பிரமுகரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், ஆசியாவைச் சேர்ந்த வர்த்தகர் மீதான போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிமன்றம், அந்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 15 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த தண்டனைக்காலம் முடிந்த பின்னர் அவரை நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டது.

Next Story