கொரோனா பரவல் அதிகரிப்பு: பாகிஸ்தானில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு


கொரோனா பரவல் அதிகரிப்பு: பாகிஸ்தானில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு
x
தினத்தந்தி 29 March 2021 12:43 AM GMT (Updated: 29 March 2021 12:43 AM GMT)

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில்  கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,767 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 54 ஆயிரத்து 592 ஆக உள்ளது. 

அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14,215 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பாகிஸ்தான் தற்போது 31-வது இடத்தில் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாகிஸ்தானில் 4 ஆயிரத்திற்கும் மேல் புதிய பாதிப்புகள் பதிவாகி வருகிறது. 

இதன்காரணமாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 


Next Story