90% பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் - ஜோ பைடன்


90% பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் - ஜோ பைடன்
x
தினத்தந்தி 29 March 2021 9:21 PM GMT (Updated: 29 March 2021 9:21 PM GMT)

90% பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜோ பைடன் அறிவித்தார்.

ஓராண்டுக்கும் மேலாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் உயிர் கொல்லி கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.‌

 ஜோ பைடன் பதவி காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறார்.‌

இந்தநிலையில் இது குறித்து அவர் கூறியதாவது:-

இன்று முதல் மூன்று வாரங்கள் வரை, 90% பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

 அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் உள்ளதால்  
ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் 90% பேர் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள்.
என்றார்.

100 நாட்களில் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்துவது என்பது மிகவும் சவாலான பணி. ஆனால் நம்மால் முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி என 3 நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கர்கள் அனைவருக்கும் மே மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story