உலக செய்திகள்

மியான்மருடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவிப்பு + "||" + US suspends all trade with Myanmar until elected government returns

மியான்மருடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

மியான்மருடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவிப்பு
மியான்மரில் ராணுவத்தின் அடக்குமுறைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
வாஷிங்டன்,

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த சனிக்கிழமை ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.  இதுவரை மியான்மர் ராணுவத்தால் போராட்டக்காரர்கள் 459- பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

ராணுவ ஆட்சி தொடங்கியதற்கு பிறகு ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. இதனால் இது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சர்வதேச நாடுகள் மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்தன. 

இந்த நிலையில்,  மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசங்காம் அமையும் வரை அந்நாட்டுடனான வர்த்தக உறவுகளை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக  பிரதிநிதி கதேரின் டை  தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.  2013- ஆம் ஆண்டு மியான்மருடன் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு வர்த்தக ஒப்பந்தங்கள்  நிறுத்தி வைக்கப்படுவதாக கதேரின் டை தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. மியான்மர்: ராணுவ படைத்தளங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துளன.
2. மியான்மர்: கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றிய ராணுவம்
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
3. இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதரகத்தை கைப்பற்றிய மியான்மர் ராணுவம்
ஆங் சான் சூகியை விடுவிக்க கோரிய இங்கிலாந்துக்கான மியான்மரின் தூதர், தூதராக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
4. மியான்மரில் ராணுவத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது
மியான்மரில் ராணுவத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. மியான்மர் ராணுவத்தின் செயல் மூர்க்கத்தனமானது: ஜோ பைடன் கடும் விமர்சனம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன