உலக செய்திகள்

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 796 பேருக்கு கொரோனா + "||" + Corona to 796 people in the last 24 hours in Oman

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 796 பேருக்கு கொரோனா

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 796 பேருக்கு கொரோனா
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஸ்கட்,

ஓமன் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 524 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 91 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,662 ஆக அதிகரித்துள்ளது. ஓமனில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 161 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. கேரளாவில் இன்று 11,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 82,738 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 461 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. அசாமில் இன்று 353 பேருக்கு கொரோனா; 229 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 2,238 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. மராட்டிய மாநிலத்தில் இன்று 2,791 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
மராட்டிய மாநிலத்தில் தற்போது 26,805 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.