உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி ரமலான் மாத நோன்பை பாதிக்காது; அமீரக பத்வா கவுன்சில் அறிவிப்பு + "||" + UAE Fatwa Council says taking Covid-19 vaccine does not break Ramadan fast

கொரோனா தடுப்பூசி ரமலான் மாத நோன்பை பாதிக்காது; அமீரக பத்வா கவுன்சில் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி ரமலான் மாத நோன்பை பாதிக்காது; அமீரக பத்வா கவுன்சில் அறிவிப்பு
அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, பத்வா கவுன்சில் சார்பில் காணொலி கூட்டம் வாயிலாக அபுதாபியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு அந்த கவுன்சில் தலைவர் ஷேக் அப்துல்லா பின் பய்யா தலைமை புரிந்தார். இதில் நோன்பு நோற்கும் காலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் வைக்கும் நோன்பு, அதன் வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகள், புனித திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள மேற்கோள்கள், முகம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் ஆகியவைகளை வைத்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் இஸ்லாமிய கோட்பாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி உள்ளது. எனவே ரமலான் மாதத்தில் நோற்கும் நோன்பை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எந்தவிதத்திலும் பாதிக்காது என அறிவிக்கப்பட்டது. நோன்பு ஏற்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டிருந்தாலும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அமீரகத்தில் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 80 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 90 ஆயிரமாக உள்ளது. அதன்படி தற்போது 100 க்கு சராசரியாக 85 பேர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே பத்வா கவுன்சில் அறிவிப்பை தொடர்ந்து ரமலான் மாதத்திலும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் விகிதத்தில் மாற்றம் இருக்காது என தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் 81.85 கோடி
இந்தியாவில் இதுவரை 81.85 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.
2. ‘நிகழ்ச்சி முடிந்து விட்டது’ தடுப்பூசி விவகாரம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
மோடி பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டது.
3. ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது; பிரதமர் மோடி கிண்டல்
ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் இங்கு ஒரு கட்சிக்கு (காங்கிரஸ்) நள்ளிரவில் காய்ச்சல் வந்து விட்டது என பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
4. நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி 73 கோடி
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 73 கோடியை கடந்து உள்ளது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி: கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.