வங்காளதேசத்தில் ஒருவாரத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு


இந்தியா - வங்காளதேச எல்லை (Photo Credit: AFP)
x
இந்தியா - வங்காளதேச எல்லை (Photo Credit: AFP)
தினத்தந்தி 3 April 2021 7:46 AM GMT (Updated: 3 April 2021 7:46 AM GMT)

வங்காளதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்வையடுத்து ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா, 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. வங்காளதேசத்தில் கடந்த வியாழக்கிழமை 6,469- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  6,24,594- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வால் அந்நாட்டில்  ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 5 ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என வங்காளதேச  அரசு அறிவித்துள்ளது. 

அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள தடை எதுவும் இல்லை எனவும் தொழிற்சாலைகள் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி இயங்கலாம் எனவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story