உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13.13- கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13.13- கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 4 April 2021 1:54 AM GMT (Updated: 4 April 2021 1:54 AM GMT)

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13.13- கோடியாக உயர்ந்துள்ளது

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இன்னமும் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.  தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  

எனினும்,  2-வது, 3-வது அலைகளாக பரவும் கொரோனா கடுமையான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,13,42,,561 -ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்து 58 ஆயிரத்து 675-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 57 லட்சத்து 19 ஆயிரத்து 924- ஆக உள்ளது.  

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ஆம் இடத்திலும்  இந்தியா 3-ஆம் இடத்திலும் உள்ளன.


Next Story