துபாய்: பால்கனியில் ஆடையின்றி கும்பலாக நின்ற பெண்கள் கைது


துபாய்: பால்கனியில் ஆடையின்றி கும்பலாக நின்ற பெண்கள் கைது
x
தினத்தந்தி 5 April 2021 12:59 PM GMT (Updated: 5 April 2021 12:59 PM GMT)

துபாயில் பால்கனியில் ஆடையின்றி கும்பலாக நின்ற பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


துபாய்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பொது இடங்களில் முத்தமிடுவது அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்துவது, அநாகரீக உடை அணிவது  போன்றவற்றிற்கு  தடை உள்ளது.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் துபாயின் மெரினா பகுதியில் பால்கனியில்  பெண்கள் கும்பலாக   நிர்வாண போஸ் கொடுத்து உள்ளனர். இதுகுறித்த வீடியோவும், படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.  இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த பெண்கள் விளம்பரத்திற்காக  பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில்  பொது ஒழுக்கச் சட்டத்தை மீறியதற்காக ஆறு மாத சிறைத்தண்டனையும் சுமார் 1,000 டாலர் (சுமார் ரூ .1 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும்.

இத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள் சமுதாயத்தின் மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கவில்லை என்று துபாய் போலீசார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


"அநாகரீகமான" வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துபாய் போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அரசு ஊடகமான தி நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. 

Next Story