உலக செய்திகள்

அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு + "||" + 9673122_Leakage of toxic water from a sewage reservoir in the United States

அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு

அமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய கழிவுநீர் தேக்கம் அமைந்துள்ளது.

பாஸ்பேட் ஆலையிலிருந்து வெளியேறிய பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் கலந்த பல லட்சம் லிட்டர் நீர் இந்த கழிவுநீர் தேக்கத்தில் உள்ளது.இந்த நிலையில் இந்த கழிவு நீர் தேக்கத்தின் சுற்றுச்சுவரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நச்சு கழிவு நீர் கசிந்து வருகிறது.கழிவு நீர் கசிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நச்சு கலந்த நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.‌

இதனிடையே சுற்றுச்சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்து கழிவு நீர் கசிவை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.இதனைத் தொடர்ந்து மாகாண கவர்னர் ரான் டிசாண்டிஸ் மாகாணம் முழுவதும் அவசர நிலையை அறிவித்தார்.தம்பா நகரில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த கழிவுநீர் தேக்கத்துக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.கழிவுநீர் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

 


தொடர்புடைய செய்திகள்

1. ஹமாஸ் போராளிகள்-இஸ்ரேல் ராணுவம் மோதல்: சமாதான முயற்சிக்காக அமெரிக்க தூதர் இஸ்ரேல் பயணம்
பாலஸ்தீனத்தின் காசா நகரைச் சேர்ந்த ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
2. அமெரிக்காவில் சட்டவிரோத ஊடுருவல்களால் இணைய பாதுகாப்பை மேம்படுத்த ஜோ பைடன் உத்தரவு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணையவழி தாக்குதலால் மிகப்பெரிய குழாய்வழி எரிபொருள் வினியோகத்தை நிறுத்த வேண்டிய நெருக்கடி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.
3. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுமி உள்பட 3 பேர் காயம்
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
4. “இந்தியாவின் நண்பன் என்ற முறையில் அமெரிக்கா உதவிகளை செய்து வருகிறது” - கமலா ஹாரிஸ்
இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
5. அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் - அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை
அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.