மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட போது புஜேரா மலைப் பகுதியில் சிக்கிக்கொண்ட 3 பேர் பத்திரமாக மீட்பு


மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட போது புஜேரா மலைப் பகுதியில் சிக்கிக்கொண்ட 3 பேர் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 5 April 2021 10:21 PM GMT (Updated: 5 April 2021 10:21 PM GMT)

புஜேரா தீயணைப்புத்துறை டுவிட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

புஜேராவின் டிப்பா அல் குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில், சம்பவத்தன்று வெளிநாட்டை சேர்ந்த 2 பெண்கள் உட்பட் 3 பேர் மெலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கடந்த போது தொலைபேசியில் சிக்னல் இல்லாமல் போனது. இதனால் அவர்களால் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.இதேபோல குடும்பத்தினராலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் போலீசார் குறிப்பிட்ட மலைப் பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் 3 பேரும் மேற்கொண்டு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் மலையின் ஒரு பகுதியில் இருப்பதை தீயணைப்புத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் அவர்கள் 3 பேரும் பத்திரமாக தரைப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பரிசோதனையில், 3 பேரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதையடுத்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் சிறப்புடன் செயல்பட்ட தீயணைப்புத்துறை ஊழியர்களுக்கு தீயணைப்புத்துறை இயக்குனர் அலி ஒபைத் அல் துனைஜி பாராட்டு தெரிவித்தார்.


Next Story