உலக செய்திகள்

ரஷ்யாவில் 81 பேருக்கு இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா பாதிப்புகள் உறுதி + "||" + Eighty one people in Russia have been diagnosed with UK corona infection

ரஷ்யாவில் 81 பேருக்கு இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா பாதிப்புகள் உறுதி

ரஷ்யாவில் 81 பேருக்கு இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா பாதிப்புகள் உறுதி
ரஷ்யாவில் 81 பேருக்கு இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
மாஸ்கோ,

ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 45.89 லட்சம் ஆக உள்ளது.  நாள்தோறும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரசின் பாதிப்புகள் ரஷ்யாவிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் பொது சுகாதார கண்காணிப்பகத்தின் தலைவர் அன்ன பொப்போவா கூறும்பொது, இதுவரை இங்கிலாந்தின் 81 கொரோனா மாதிரிகளும் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் 6 கொரோனா மாதிரிகளும் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த பாதிப்புகள் உள்ளவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.  இந்த பாதிப்புகள் எல்லாம் ஐரோப்பிய, ஆசிய, தென்அமெரிக்க நாடுகளில் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்திலும் அதிக அளவில் காணப்படுகின்றன.

உலகம் முழுவதும் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க வைரசின் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருவது அதிகரித்து உள்ளது என  அவர் எச்சரிக்கை ஏற்படுத்தி உள்ளார்.  அதனால், ரஷ்யர்கள் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டில் கடந்த 2 வாரங்களாக 187 மாவட்டங்களில் குறைந்த கொரோனா பாதிப்புகள்: மத்திய சுகாதார அமைச்சகம்
நாட்டில் கடந்த 2 வாரங்களாக 187 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
2. உயர்கல்வி சேர்க்கைக்கு அவசியம்: பிளஸ்-2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி
உயர்கல்வி சேர்க்கைக்கு அவசியம் என்பதால் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
3. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் ஆய்வு: ‘சாத்தியம் உள்ள அனைத்து ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி’ அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
‘பெல் உள்ளிட்ட சாத்தியம் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தால் பணி தொடங்கப்படும்’ என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
4. பிரதமர் கிசான் திட்டத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: மீண்டும் உழவர் சந்தை திட்டம் செயல்படுத்தப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி தமிழகம் முழுவதும் உழவர் சந்தை திட்டம் மீண்டும் முழு அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
5. நடிகர் சல்மான் கான் சகோதரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நடிகர் சல்மான் கானின் இரண்டு சகோதரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.