உலக செய்திகள்

பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine for people over the age of 80 in Pakistan

பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி

பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 3,953 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்து 96 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் மொத்த கொரோனா உயிரிழப்பு 14 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.கடந்த 3-ந் தேதி வரை அங்கு 9 லட்சத்து 36 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் பாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான மந்திரி ஆசாத் உமர் கூறுகையில், “கோடைகாலத்தின் தொடக்கத்தையும், தடுப்பூசி மையங்களை அடைவதற்கும் வரிசையில் காத்திருப்பதற்கும் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமத்தையும் மனதில் கொண்டு 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் மேலும் 33 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பெங்களூருவில் இதுவரை கொரோனா பாதித்த போலீசாரின் எண்ணிக்கை 1,221 ஆக உயர்ந்துள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.90 கோடியாக அதிகரித்துள்ளது.
3. பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 லட்சத்தை தாண்டியது
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவில் இருந்து மீண்டார்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டநிலையில், நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவில் இருந்து மீண்டார்.
5. கோவிஷீல்டு தடுப்பூசி: கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் - இங்கிலாந்து சுகாதாரத் துறை
ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.