உலக செய்திகள்

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை + "||" + Sri Lanka bans palm oil imports, cultivation of oil palm will be completely banned

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை
இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்
கொழும்பு, 

இலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்து அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை நிறுத்தும் விதமாக முள் தேங்காய் என்று அழைக்கப்படும் ஒரு வகை பனை மரங்களை பயிரிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் தோட்ட நிறுவனங்கள் தங்கள் பனை மரங்களில் 10 சதவீதத்தை அகற்றி விட்டு ரப்பர் அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த மரங்களைப் பயிரிட உத்தரவிடப்பட்டுள்ளன‌. இதன் மூலம் பனை சாகுபடி மற்றும் பாமாயில் நுகர்வை முழுமையாக நிறுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கான விமான போக்குவரத்து: ஜூலை 11ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு - பெரு நாடு அறிவிப்பு
இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, பெரு நாடு அறிவித்துள்ளது.
2. இலங்கையில் நாளை முதல் பயணக்கட்டுப்பாடுகள் தளர்வு
இலங்கையில் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையையும் மீறி நாளை முதல் பயணக்கட்டுபாடுகள் தளர்த்தப்பட உள்ளன.
3. இலங்கையில் இந்திய தூதருடன் தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகள் சந்திப்பு
1987-ல் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையிலான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக 13-வது சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
4. வழக்கு நிலுவையில் உள்ள போது, இதே கோரிக்கையுடன் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு லைகா மீது ஷங்கர் புகார்
இந்தியன் 2 படத்தை முடிக்காமல் பிற படங்களை இயக்க தடைகோரி லைகா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கர் புகார் தெரிவித்துள்ளார்.
5. இலங்கையில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 67- பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,284- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.