உலக செய்திகள்

துபாயில் புதிய ‘ஸ்மார்ட்’ நகரம்; ஆட்சியாளர் அறிவிப்பு + "||" + The new smart city in Dubai; Notice of the Ruler

துபாயில் புதிய ‘ஸ்மார்ட்’ நகரம்; ஆட்சியாளர் அறிவிப்பு

துபாயில் புதிய ‘ஸ்மார்ட்’ நகரம்; ஆட்சியாளர் அறிவிப்பு
துபாயில் புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் ஸ்மார்ட் நகரம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இது குறித்து துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்மார்ட் நகரம்

துபாயில் இன்று (அதாவது நேற்று) புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் கலை மற்றும் கலாசாரத்திற்கான ஸ்மார்ட் நகரம் அறிமுகம் செய்யப்படுகிறது. படைப்புத்திறன் பொருளாதாரத்தின் தலைநகராக உலக அளவில் துபாயை உருவாக்கும் விதத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த படைப்புத்திறன் மாவட்டத்தில் துபாய் கலை மற்றும் கலாசார ஆணையத்தின் தலைவர் ஷேக்கா லத்திபா பிந்த் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மேற்பார்வை பணிகளை மேற்கொள்வார். அதன் விரைவான வளர்ச்சியை நான் அனைவரும் விரைவில் காணப்போகிறோம். துபாயின் படைப்பாற்றலை தடையில்லாமல் இந்த நகரம் கொண்டு செல்லும்.

இதன் மூலம் ஆக்கப்பூர்வமான படைப்புகளை தயாரிக்கும் அல்லது உருவாக்கும் 8 ஆயிரம் நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அங்கு பணியாற்றும் 70 ஆயிரம் படைப்பாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரம் பேராக உயரும். புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இது குறித்து துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறியதாவது:-

முன்னேற்றத்தின் புதிய படி

துபாயில் உலகம் முழுவதிலும் உள்ள படைப்பாற்றல் மிக்கவர்களுக்கு சேவை அளிப்பதற்கான ஒருங்கிணைந்த பகுதியாக அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டத்தை இன்று (அதாவது நேற்று) உருவாக்கியுள்ளோம். சிறந்த திறமையாளர்களுக்கு அவர்களின் படைப்புகளை உருவாக்க சிறப்பு பகுதிகள், திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் சலுகைகள் வழங்குவது மட்டுமல்லாமல் அவர்கள் நிறுவனங்களை புதிதாக நிறுவவும் வாய்ப்புகளை அளிக்கிறோம்.

அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டமானது துபாயின் முன்னேற்றத்தின் புதிய படியாகும். மேலும் இது உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கான தளமாக செயல்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. துபாயில் வைரலாகும் பிறை வடிவ ஏரியின் புகைப்படங்கள்
துபாய் அல் குத்ரா பாலைவன பகுதியில் பிறை வடிவத்தில் ஏரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
2. துபாயில், 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு ரத்து நிலத்துறையின் சார்பில் புதிய சட்ட வரைவு தாக்கல்
துபாயில், 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு ரத்து செய்ய நிலத்துறையின் சார்பில் புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3. துபாயில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து இந்தியர் சாகசம்; “71-வது பிறந்த நாளை கொண்டாடினார்”
துபாயில், ‘ஸ்கை டைவிங்' பயிற்சியாளருடன் இணைந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து இந்தியர் ஒருவர் தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடி சாகசம் புரிந்தார்.
4. துபாயில், உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்கப்படுகிறது
துபாயில் உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்கப்படுகிறது. இது குறித்து அல் பரக்கா பேரீச்சை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
5. துபாயில், கண்டுபிடிப்பு வாரம் அதிகாரி தொடங்கி வைத்தார்
துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தின் சார்பில் கண்டுபிடிப்பு வாரம் நேற்று துபாயில் தொடங்கப்பட்டது. இதை ஆணையத்தின் மேலாண்மை இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சயீத் முகம்மது அல் தயார் நேற்று தொடங்கி வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார்.