உலக செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,988 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona infection confirmed for 1,988 people in the last 24 hours in the UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,988 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,988 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,74,136 ஆக உயர்ந்துள்ளது.
அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,988 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 136 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 138 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது அமீரகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 13 ஆயிரத்து 735 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசத்தில் இன்று 11,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மத்திய பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 11,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 67,123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,70,707 ஆக அதிகரித்துள்ளது.
3. தமிழகத்தில் இன்று 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,160 ஆக அதிகரித்துள்ளது.
5. தலைநகர் டெல்லியில் இன்று 19 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
டெல்லியில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று 19 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.