ஐ.நா. நிதிக்கு இந்தியா 500,000 அமெரிக்க டாலர் நிதியுதவி


ஐ.நா. நிதிக்கு இந்தியா 500,000 அமெரிக்க டாலர்  நிதியுதவி
x
தினத்தந்தி 7 April 2021 9:56 PM GMT (Updated: 7 April 2021 9:56 PM GMT)

ஐ.நா. நிதிக்கு இந்தியா இதுவரை 1,050,000 அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நியூயார்க்,

ஐ.நா.வின் சிறப்பு நிதியானது, ஐ.நா.வின் கீழ் இயங்கும் அமைப்புகளின் நிர்வாகத்தை மேம்படுத்த உதவும். இதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம். சிறப்பு நிதிக்குப் பங்களிக்கும் நாடுகளின் பெயர்கள், ஐ.நா.வின் இணையதளத்தில் வெளியிடப்படும். 

இந்நிலையில், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளை நிதிக்கு இந்தியா 500,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இதுவரை இந்த நிதிக்கு இந்தியா 1,050,000 அமெரிக்க டாலர்களை வழங்கி தனது பங்களிப்பை ஆற்றியுள்ளது.

Next Story