இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பு - நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்


இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பு - நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்
x
தினத்தந்தி 8 April 2021 4:02 AM GMT (Updated: 8 April 2021 4:02 AM GMT)

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

வெல்லிங்டன்,

இந்தியாவில் கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது. 

கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. அதனை தொடர்ந்து நேற்றைய தினம் 1,15,736 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

இந்நிலையில் தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள், சொந்த குடிமக்கள் உள்பட அனைவருக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார். இந்த தடை ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

Next Story