உலக செய்திகள்

வடகொரியாவில் இதுவரை கொரோனா பரவல் ஏற்படவில்லை - அதிபர் கிம் ஜாங் அன் தகவல் + "||" + No corona outbreak in North Korea so far - President Kim Jong Un

வடகொரியாவில் இதுவரை கொரோனா பரவல் ஏற்படவில்லை - அதிபர் கிம் ஜாங் அன் தகவல்

வடகொரியாவில் இதுவரை கொரோனா பரவல் ஏற்படவில்லை - அதிபர் கிம் ஜாங் அன் தகவல்
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே வடகொரியாவில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
பியாங்யாங்,

உலக நாடுகளில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில், வைரஸ் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக அங்கு இதுவரை ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.

ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.‌ இருப்பினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக உலக சுகாதார அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வடகொரியாவில் 23,121 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது. 

கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 732 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளை உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு இல்லை: வடகொரியா அறிவிப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவது இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
2. வடகொரியா விவகாரம்: ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் உறுதி
வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தால் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே சுமுகமான உறவு இல்லை.
3. ஏவுகணை சோதனை விவகாரம்: அமெரிக்க அதிபா் பைடனுக்கு வட கொரியா கண்டனம்
வடகொரியா ஏறத்தாழ ஓராண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்தது.
4. வடகொரியா அதிபரின் வாரிசான கிம் ஜாங் நம்மின் கொலை தொடர்பான ஆவணப்படம் வெளியானது
வடகொரியா அதிபரின் வாரிசான கிம் ஜாங் நம்மின் கொலை தொடர்பாக ஆவணப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆவேசம்
புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிஏற்க உள்ள நிலையில் எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.