டெக்சாஸ் மாகாணத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் வெகுதூரம் வரை பரவிய கரும்புகை


டெக்சாஸ் மாகாணத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் வெகுதூரம் வரை பரவிய கரும்புகை
x
தினத்தந்தி 8 April 2021 7:37 AM GMT (Updated: 8 April 2021 7:37 AM GMT)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால், அடர்ந்த கரும்புகை வெளியேறி வெகுதூரம் வரை பரவியது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சேனல்வியூவ் பகுதியில், ரசாயன கிடங்கு ஒன்று அமைந்துள்ளது. அங்கு நேற்று எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த கிடங்களில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து மளமளவென பற்றிய தீ சிறிது நேரத்தில் ஒட்டுமொத்த கிடங்கையும் நாசம் செய்தது. இந்த ரசாயன கிடங்கில், நச்சு மிகுந்த மோனோ எத்தனாலமைன் ஆல்கஹால் மற்றும் டிரை எத்தனாலமைன் ஆல்கஹால் பலநூறு பீப்பாய்களில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரசாயணங்கள் பற்றி எரிவதால் வானில் வெகுதூரம் வரை கரும்புகை பரவியது. ஆனால் இதன் காரணமாக காற்றில் இதுவரை எந்த நச்சும் பரவியதாக கண்டறியப்படவில்லை என்று டெக்சாஸ் மாகாண அரசு விளக்கம் அளித்துள்ளது.  ரசாயண திரவங்களுடன் சேர்ந்து எரியும் நெருப்பை, அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

Next Story