உலக செய்திகள்

பெண்கள் கவர்ச்சிகரமாக உடுத்துவது தான் பாலியல் பலாத்காரங்கள் பெருகுவதற்கு காரணம் - இம்ரான்கான் சர்ச்சை பேச்சு + "||" + The reason why rapes are on the rise is because women dress attractive - Imran Khan

பெண்கள் கவர்ச்சிகரமாக உடுத்துவது தான் பாலியல் பலாத்காரங்கள் பெருகுவதற்கு காரணம் - இம்ரான்கான் சர்ச்சை பேச்சு

பெண்கள் கவர்ச்சிகரமாக உடுத்துவது தான் பாலியல் பலாத்காரங்கள் பெருகுவதற்கு காரணம் -  இம்ரான்கான் சர்ச்சை பேச்சு
பெண்கள் கவர்ச்சிகரமாக உடுத்துவது தான் பாலியல் பலாத்காரங்கள் பெருகுவதற்கு காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், “ஆண்கள் சபலப்படுவதை தடுக்க பெண்கள் உடல்பாகங்களை மூடி மறைக்கிற விதத்தில் உடை அணிய வேண்டும், கவர்ச்சிகரமாக உடுத்துவதுதான் பாலியல் பலாத்காரங்கள் பெருகுவதற்கு காரணமாக அமைகிறது” என்று கூறியது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள மனித உரிமை குழுக்கள், “இம்ரான்கான் பாலியல் பலாத்கார மன்னிப்பாளராக உள்ளார்” என கூறி கண்டனம் தெரிவித்துள்ளன.