உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 31 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு + "||" + 31 Taliban terrorists killed in a day in Afghanistan

ஆப்கானிஸ்தானில் 31 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் 31 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்புக்கு இன்னும் தலீபான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.
காபூல், 

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்புக்கு இன்னும் தலீபான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸ் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு காந்தகார் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்த நாட்டின் ராணுவத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், அங்குள்ள ஆர்பான்தாப், ஜாரி, ஷாவாலி கோட்டான் மற்றும் மேவான்ட் மாவட்டங்களில் ராணுவம், விமானப்படையின் ஆதரவுடன் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதல்களில் 31 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களது ஆயுதங்கள், வெடிபொருட்களும் அழிக்கப்பட்டன.

இந்த தகவல்களை ஆப்கானிஸ்தான் ராணுவம் நேற்று தெரிவித்தது.