உலக செய்திகள்

புதிதாக 1,320 பேருக்கு கொரோனா: ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை கடந்தது + "||" + Corona for 1,320 new people: The total corona impact in Oman has crossed one lakh 68 thousand

புதிதாக 1,320 பேருக்கு கொரோனா: ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை கடந்தது

புதிதாக 1,320 பேருக்கு கொரோனா: ஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை கடந்தது
ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 920 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89.2 சதவீதமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக நேற்று 12 பேர் பலியானார்கள். இதனால் ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,747 ஆக இருந்து வருகிறது. தற்போது உடல்நலக்குறைவால் 204 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமீரகத்தில் ஒரே நாளில் 2,112 பேருக்கு கொரோனா; 2,191 பேர் குணமடைந்தனர்
அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 131 ஆக உயர்ந்தது.
2. மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - சுகாதாரத்துறை துணை இயக்குனர் விளக்கம்
மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.
3. கொரோனாவின் தாக்கத்தை குறைக்க தீவிர பரிசோதனை; முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
கொரோனாவின் தாக்கத்தை குறைக்க உமிழ்நீர் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.
4. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 208 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 390 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.