உலக செய்திகள்

ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார்; அமெரிக்கா அறிவிப்பு + "||" + U.S. Prepared to Lift Sanctions Inconsistent With Iran Nuclear Deal

ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார்; அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார்; அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் 2015-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது.

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்து போட்டன. முழுமையான கூட்டு செயல்திட்டம் என்றழைக்கப்படுகிற இந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிடவும், யுரேனியம் கையிருப்பை 15 ஆண்டுகளில் குறைக்கவும், அதற்கு பதிலாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின்மீதான பொருளாதார தடைகளை திரும்பப்பெறவும் வழிவகை செய்துள்ளது.

ஒபாமா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அவருக்கு பின்னர் வந்த டிரம்ப் காலத்தில் (2018) அமெரிக்கா விலகியது. இப்போது அமெரிக்காவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோ பைடன் ஜனாதிபதியாகி இருக்கிறார்.

இந்த நிலையில், அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு ஒவ்வாத வகையில் ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ளார். ஆனால் அதுபற்றிய கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை. வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் திரைமறைவு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


தொடர்புடைய செய்திகள்

1. ஏமனில் ஈரான் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
ஏமன் நாட்டில் செங்கடல் பகுதியில் ஈரான் அரசுக்கு சொந்தமான எம்.வி.சாவிஸ் என்கிற சரக்கு கப்பல் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
2. ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி: 3 பேர் காயம்
ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. ஈரான் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்
ஈரான் நாட்டிற்கு மத்திய அரசின் சார்பில் மொத்தம் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
4. ஈரானில் பயணிகள் விமானத்தை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக தகவல்
ஈரானில் பயணிகள் விமானம் கடத்த திட்டமிட்டிருந்த சதியை வெற்றிகரமாக முறியடித்ததாக புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
5. ஈரானின் அணுசக்தி பிரச்சனையின் தற்போதைய நிலைமை அபாய கட்டத்தில் உள்ளது - சீனா
ஈரானின் அணுசக்தி பிரச்சனையின் தற்போதைய நிலைமை அபாய கட்டத்தில் உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.