உலக செய்திகள்

உக்ரைன் எல்லை அருகே ரஷ்ய நாட்டின் ராணுவம் குவிப்பு + "||" + Russian military Concentration near Ukraine border

உக்ரைன் எல்லை அருகே ரஷ்ய நாட்டின் ராணுவம் குவிப்பு

உக்ரைன் எல்லை அருகே ரஷ்ய நாட்டின் ராணுவம் குவிப்பு
உக்ரைன் எல்லை அருகே ரஷ்ய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாஸ்கோ,

உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லை பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற ரஷ்யா முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ரஷ்ய எல்லையில் உக்ரைன் அரசு தனது நாட்டின் ராணுவ படைகளை குவித்து வருகிறது, 

இதை காரணம் காட்டி ரஷ்யாவும் தன் பங்கிற்கு படைகளை குவித்து வருகிறது. இந்த இரு நாடுகள் இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் எல்லையில் ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவ பயிற்சி பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.