நார்வே நாட்டில் கொரோனா விதிகளை பின்பற்றாத பிரதமருக்கு அபராதம் விதிப்பு


நார்வே நாட்டில் கொரோனா விதிகளை பின்பற்றாத பிரதமருக்கு அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 9 April 2021 9:47 AM GMT (Updated: 9 April 2021 9:47 AM GMT)

நார்வே நாட்டில் கொரோனா விதிகளை பின்பற்றாத பிரதமருக்கு 20 ஆயிரம் நார்வே கிரவுன்ஸ் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில், கொரோனா விதிகளை மதிக்கத்தவறிய அந்நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்-க்கு  போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

 நார்வே நாட்டில் இருமுறை பிரதமராக பதவி வகித்துள்ள எர்னா சொல்பேர்க் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தனது  60-வது பிறந்த நாளை கொண்டாடினார்.நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், 10- க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லைஎன்று நார்வே அரசு அறிவித்தது.  

ஆனால், இந்த கட்டுப்பாடுகளை மீறி  தனது குடும்ப உறுப்பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளைக் கொண்டாடியதால் பிரதமருக்கு 20 ஆயிரம் நார்வே கிரவுன்ஸ் தொகையை அபராதமாக போலீசார் விதித்துள்ளார்.  நார்வே நாட்டில் இதுவரை 1,01,96- கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story