போலந்து நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 24,856 பேருக்கு தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 April 2021 7:12 PM GMT (Updated: 10 April 2021 7:12 PM GMT)

போலந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,856 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வார்சா, 

இங்கிலாந்தில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போலந்து நாட்டில் இன்று புதிதாக 24,856 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 25,52,898 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 749 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது.

போலந்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 21,43,065 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,51,657 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


Next Story