ஆஸ்திரேலியா: செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


ஆஸ்திரேலியா: செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 April 2021 8:49 PM GMT (Updated: 10 April 2021 8:49 PM GMT)

ஆஸ்திரேலியாவை செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கான்பெர்ரா, 

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடலோரப் பகுதிகளை செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த 2 புயல்களும் வார இறுதியில் அடுத்தடுத்து தாக்கவுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்த இரண்டு புயல்கள் காரணமாக அரிய மற்றும் ஆபத்தான வானிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளிகளின் தாக்கம் அடுத்த 24 முதல் 28 மணி நேரத்தில் உணரப்படும் என்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு கிமோர் மற்றும் இந்தோனேசியாவின் சில பகுதிகளுக்கு செரோஜா புயல் ஏற்கனவே அழிவு மற்றும் இறப்புகளை ஏற்படுத்திய உள்ளது. வெப்பமண்டல சூறாவளிகளான செரோஜா மற்றும் ஓடெட் புயல்கள் நிலத்திற்கு மிகவும் நெருக்கமாகவும் மணிக்கு 150 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் மழை “கடினமாகவும் வேகமாகவும்” உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் (பிஓஎம்) எச்சரித்துள்ளது.


Next Story