அமீரக மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவை மாற்றியமைத்து அதிபர் உத்தரவு

அமீரக மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவை மாற்றியமைத்து அதிபர் உத்தரவு
x
தினத்தந்தி 11 April 2021 9:47 AM GMT (Updated: 11 April 2021 9:47 AM GMT)

அமீரக மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவை மாற்றியமைத்து அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அபுதாபி,

அமீரக மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவை மாற்றியமைத்து அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அமீரக மத்திய வங்கியின் தலைவராக அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் இருப்பார். இந்த நிர்வாகக் குழுவில் துணைத் தலைவர்களாக அப்துல் ரஹ்மான் சாலே அல் சாலே, ஜாசிம் முகம்மது புஆதபா அல் ஜாபி ஆகியோரும், கவர்னராக காலித் முகம்மது சலீம் பலாமா ஆகியோரும் பதவி வகிப்பர். மேலும் யூனிஸ் ஹாஜி அல் கூரி, சமி தயின் அல் கம்சி மற்றும் டாக்டர் அலி முகம்மது பகீத் அல் ருமைதி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர்.

அமீரக மத்திய சட்டம் எண் 10/1980-ன் கீழ் அமீரக மத்திய வங்கி ஏற்படுத்தப்பட்டது. இந்த வங்கி நிதித்துறை மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story