சீன கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது குறித்து அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கவலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 April 2021 9:38 PM GMT (Updated: 11 April 2021 9:38 PM GMT)

சீன கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது குறித்து அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மணிலா, 

அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவு மந்திரி டெல்பின் லோரென்சானா ஆகிய இருவரும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது தென் சீனக் கடலில் உள்ள விட்சன் ரீப் தீவில் சீன கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது குறித்து இருவரும் கவலை தெரிவித்தனர். மேலும் தென் சீனக் கடலின் நிலைமை மற்றும் சமீபத்தில் சீனக் கப்பல்களை விட்சன் ரீப்பில் இருந்து வெளியேற்றுவது குறித்து இருந்து விவாதித்தனர்.

முன்னதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 250 க்கும் மேற்பட்ட சீனக் கப்பல்கள் தீவுகள் மற்றும் பவளப்பாறைகள் அருகே காணப்பட்டதாகக் தெரிவித்திருந்தது. இந்த கப்பல்களை தென் சீன கடல் பகுதிகளில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே கடல் பகுதி தனக்கு சொந்தமானது என்றும், மோசமான கடல் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக சீனக் கப்பல்கள் அங்கே தங்கியிருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

Next Story