உலக செய்திகள்

ரமலான் மாதம்: அபுதாபியில் பஸ்கள் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு + "||" + Announcement of the operating time of buses in Abu Dhabi

ரமலான் மாதம்: அபுதாபியில் பஸ்கள் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு

ரமலான் மாதம்: அபுதாபியில் பஸ்கள் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு
ரமலான் மாதம்: அபுதாபியில் பஸ்கள் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு.

அபுதாபி,

அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபி பகுதியில் பெரும்பாலான பஸ்கள் வழக்கமான நேரத்திலேயே இயக்கப்படும். எனினும் ஏ10, ஏ20, ஏ40, 405 மற்றும் 406 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் மட்டும் மாலை 6 மணி வரை மட்டுமே இயக்கப்படும். ரமலான் மாதத்தில் 26 என்ற வழித்தடத்தில் பஸ் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படும். அல் அய்ன் பகுதியில் கடைசி பஸ் சேவையானது நள்ளிரவு 1 மணி வரை இருக்கும்.

ரமலான் மாதத்தில் அபுதாபி நகரில் கார் நிறுத்தும் இடங்களில் சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரையிலும் கட்டணம் செலுத்த வேண்டும். வியாழக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் கட்டணம் செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. சனிக்கிழமை காலை 8.59 மணி முதல் மீண்டும் கட்டணம் செலுத்தி நிறுத்த வேண்டும்.

இரவு நேர சிறப்பு தொழுகையான ‘தராவீஹ்‘ தொழுகையின் போது வாகனங்களை பள்ளிவாசல் அருகில் நிறுத்தும் போது கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதேபோல் சுங்க சாவடியில் வழக்கமான நேரத்திலேயே கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரமலான் பெருநாளைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - கமல்ஹாசன்
ரமலான் பெருநாளைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. அருள்வளம் நிறைந்த ரமலான் நோன்பு
கல் மனதையும் கரைந்து போகச் செய்து, அதனை இரக்கமுடையதாக மாற்றிடும் தன்மை என்பது, பசியினை உணர்வது கொண்டு நிகழ்வதாகும்.
3. கொரோனா தடுப்பூசி ரமலான் மாத நோன்பை பாதிக்காது; அமீரக பத்வா கவுன்சில் அறிவிப்பு
அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, பத்வா கவுன்சில் சார்பில் காணொலி கூட்டம் வாயிலாக அபுதாபியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.