”ஸ்புட்னிக் வி” தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் நடைமுறையை இந்தியா விரைந்து முடிக்கும் என நம்புகிறோம்: ரஷ்யா


”ஸ்புட்னிக் வி” தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் நடைமுறையை இந்தியா விரைந்து முடிக்கும் என நம்புகிறோம்: ரஷ்யா
x
தினத்தந்தி 12 April 2021 5:23 PM GMT (Updated: 12 April 2021 5:23 PM GMT)

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவேக்ஸின்' ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 'கோவிஷீல்டு' தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா செனகா  ஆகியவற்றின் கூட்டுடன் இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. 'கோவாக்ஸின்' தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் 10.45 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வரும்.

இந்த நிலையில்,  இது குறித்து ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் முயற்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பாக இந்த நடைமுறை அமையும். டிசிஜிஐயின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story