உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக உள்ளது ஒப்புகொண்ட சீனா உயரதிகாரி + "||" + China considering mixing Covid-19 vaccines to boost protection rate

கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக உள்ளது ஒப்புகொண்ட சீனா உயரதிகாரி

கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக உள்ளது ஒப்புகொண்ட சீனா உயரதிகாரி
சீனாவின் கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக சீனாவின் உயர் நோய் கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்.
பீஜிங்

கொரோனாவுக்கு எதிராக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. சீனாவிலும், சில தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. 2ம் தேதி நிலவரப்படி, 3.40 கோடி பேருக்கு, இரண்டு, டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, 6.50 கோடி பேருக்கு, ஒரு, டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 12 வரை சீனா 17.19 கோடிடோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது

மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அனுமதி தரவில்லை. தற்போதைக்கு, சைனோவேக் என்ற தனியார் நிறுவனம் மற்றும் 'சைனோபார்ம்' என்ற அரசு நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

மெக்சிகோ, துருக்கி, இந்தோனேசியா, ஹங்கேரி, பிரேசில், துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.சீன தடுப்பூசியின் செயல்திறன், 50.4 சதவீதமாக உள்ளதாக, பிரேசில் கூறியுள்ளது. 

இந்த நிலையில் சீனாவின்  கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக சீனாவின் உயர் நோய் கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புக்ககொண்டுள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் தலைவர் காவ் பூ கூறியதாவது:-

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்கவில்லை. தடுப்பூசிகளின் செயல்திறனை அதிகாரிக்க தடுப்பூசிகளை கலப்பது தொடர்பில் சீனா ஆலோசனை நடத்தி வருகிறது. தடுப்பூசி செயல்முறையை மேம்படுத்த டோஸ்கள் மற்றும் இடைவெளி நாட்களை மாற்றியமைப்பது உட்பட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த் செய்திஇது சீன ஊடகங்களிலும் வெளியானது.

ஆனால் பின்னர் அவர் தனது கருத்துக்களிலிருந்து பின்வாங்கினார். உலகிலுள்ள அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பு அளவு சில சமயம் அதிகமாகவும், சில சமயம் குறைவாகவும் இருக்கும் என கூறினார்.அவற்றின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு கேள்வி.

 தடுப்பூசிகளுக்கு குறைந்த பாதுகாப்பு விகிதம் இருப்பதாக தான் முன்னர் ஒப்புக்கொண்டது தவறான புரிதல் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு அரிதாகவே ஏற்படுகிறது
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு அரிதாகவே ஏற்படுகிறது நோய்த் தடுப்புக்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக் குழு (ஏஇஎப்ஐ) தகவல் தெரிவித்துள்ளது.
2. சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு பாதிப்புள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; சுகாதாரத்துறை செயலர் அறிவுரை
சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் அறிவுரை கூறினார்.
3. சென்னையில் கொரோனா நோய் அறிகுறி பரிசோதிக்க சென்ற பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை
சென்னையில் கொரோனா நோய் அறிகுறி பரிசோதிக்க சென்ற பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
4. தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் ஆந்திர அரசு அறிவிப்பு
கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.