ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை


ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை
x
தினத்தந்தி 13 April 2021 1:16 PM GMT (Updated: 13 April 2021 1:16 PM GMT)

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் கண்டறியப்பட்டுள்ளது

வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது.  கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பல அலைகளாக அடுத்து அடுத்து வேகமாக பரவி உலக  நாடுகளை திணறடித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 

இதனால், தடுப்பூசிகள் போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. ஒரே டோஸாக செலுத்தக்கூடிய இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவில் 68 லட்சம் பேருக்கு மேல் போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இதில் அரிதாக சில நபர்களுக்கு ரத்தம் உறைதல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.  

தடுப்பூசி போட்டுக்கொண்ட லட்சக்கணக்கானோரில் 6 பேருக்கு ரத்தம் உறைதல் பிரச்சினை கண்டறியப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக ஆய்வு தொடங்கியிருப்பதால், இந்த நடைமுறை முடியும் வரை தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை அளித்துள்ளது. 

Next Story