பிரான்ஸ் நாட்டில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 39,113 பேருக்கு தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 April 2021 12:15 AM GMT (Updated: 14 April 2021 12:15 AM GMT)

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாரிஸ்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகி வந்தது.

இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 39,113 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51,06,329 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 345 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 99,480 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,13,051 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 46,93,798 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 5,952 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்க்கப்படுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது.

Next Story