உலக செய்திகள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவீட் + "||" + Joe Biden Wishes For Tamil New Year

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவீட்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவீட்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) இன்று கொண்டாடப்படுகிறது. தமிம் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகங்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இந்தியா மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல தரப்பட்ட சமூகங்களும் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் புத்தாண்டு கொண்டாடும் தமிழ், கேரளா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. ‘சீனாவுடன் போட்டி போடுகிறோம், மோதலை எதிர்பார்க்கவில்லை' - அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடன் பேச்சு
சீனாவுடன் போட்டி போடுகிறோம், மோதலை எதிர்பார்க்கவில்லை என்று சீன அதிபர் ஜின்பிங்கிடம் கூறியதாக அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜோ பைடன் தெரிவித்தார்.
2. 90% பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் - ஜோ பைடன்
90% பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3. ஜோ பைடனின் கொரோனா நிவாரண நிதி மசோதா: அமெரிக்க மாளிகையில் நிறைவேறியது
ஜனாதிபதி ஜோ பைடனின் கொரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க மாளிகையில் நிறைவேறியது.
4. ஜோ பைடன் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மஜூ வர்க்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்திற்கு மேலும் 2 எம்.பிக்கள் எதிர்ப்பு
ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்திற்கு மேலும் 2 எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.