உலக செய்திகள்

அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா + "||" + The female police officer who shot the black teenager in the United States has resigned

அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா

அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி காரில் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண் போலீஸ் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி காரில் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண் போலீஸ் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரியால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து புரூக்ளின் சென்டர் நகரில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் வன்முறைகள் அரங்கேறின.

இதனிடையே டான்ட் ரைட் கொல்லப்பட்டது ஒரு விபத்து என்றும், போலீஸ் அதிகாரி கிம் பாட்டர் எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் ’டாசர்’ துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பதில் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதாகவும் புரூக்ளின் சென்டர் நகர போலீசார் தெரிவித்தனர்.‌

ஆனாலும் மக்கள் இதனை ஏற்க மறுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.‌

இந்த நிலையில் டான்ட் ரைட்டை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி கிம் பாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புரூக்ளின் சென்டர் நகரின் தலைமை போலீஸ் அதிகாரியான டிம் கேனனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.‌ இவர்களின் முடிவு போராட்டத்தை தணித்து சமூகத்தில் அமைதியை கொண்டுவர உதவும் என புரூக்ளின் சென்டர் நகர மேயர் எலியட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு; செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறினார்.
2. ஆவடியில் போலீஸ்காரரின் மனைவி தற்கொலை
ஆவடியை அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் கண்ணபிரசாத்.
3. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுமி உள்பட 3 பேர் காயம்
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
4. புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கைவரிசை: கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 8 பேர் கைது - கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கைவரிசையை காட்டினர்.
5. “இந்தியாவின் நண்பன் என்ற முறையில் அமெரிக்கா உதவிகளை செய்து வருகிறது” - கமலா ஹாரிஸ்
இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.