உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் போதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை + "||" + Indian man jailed for 22 years for killing 4 policemen in drunken crash

ஆஸ்திரேலியாவில் போதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை

ஆஸ்திரேலியாவில் போதையில் விபத்தை ஏற்படுத்தி 4 போலீஸ்காரர்களை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் (வயது 48).‌ இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் (வயது 48).‌ இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி விக்டோரியா மாகாணத்தின் தலைநகர் மெல்போர்னில் உள்ள நெடுஞ்சாலையில் மொஹிந்தர் சிங், தனது லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் போதையிலும், தூக்க கலக்கத்திலும் இருந்ததாக தெரிகிறது.‌

இதனால் அவர் நெடுஞ்சாலையில் உள்ள அவசர வழி பாதைக்கு லாரியை திருப்பி தாறுமாறாக ஓட்டி சென்றார்.‌

பின்னர் அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது லாரியை மோதினார். இந்த கோர சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து மொஹிந்தர் சிங்கை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொஹிந்தர் சிங் மீதான வழக்கு விசாரணை விக்டோரியா மாகாண சுப்ரீம் கோர்ட்டில் சுமார் ஓராண்டாக நடந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது. இதில் மொஹிந்தர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மொஹிந்தர் சிங்குக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு; செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறினார்.
2. ஆவடியில் போலீஸ்காரரின் மனைவி தற்கொலை
ஆவடியை அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் கண்ணபிரசாத்.
3. டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதல்; ஒருவர் பலி
டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
4. 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த மும்பை ஆஸ்பத்திரி தீ விபத்தில் 2 பேர் கைது
பாண்டுப் வணிக வளாக தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
5. லாரி மீது மோதிய கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்தது
லாரி மீது மோதிய கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.