உலக செய்திகள்

ஓமனில், கொரோனாவுக்கு 9 பேர் பலி + "||" + In Oman, the corona killed 9 people

ஓமனில், கொரோனாவுக்கு 9 பேர் பலி

ஓமனில், கொரோனாவுக்கு 9 பேர்  பலி
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 1,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஸ்கட்,

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 1,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 633 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 874 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக 9 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,807 ஆக இருந்து வருகிறது. தற்போது உடல்நலக்குறைவால் 264 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பலி
கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பரிதாபமாக இறந்தார்
2. க.பரமத்தி அருகே மொபட் மீது லாரி மோதி பள்ளி மாணவி பலி லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு
க.பரமத்தி அருகே மொபட் மீது லாரி மோதி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அமீரகத்தில் ஒரே நாளில் 55 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் தகவல்
அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. மாலத்தீவில் பாதிப்பு அதிகரிப்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த ராணுவம்; அதிபர் இப்ராகிம் சோலி அதிரடி நடவடிக்கை
தீவு நாடான மாலத்தீவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 4-வது அலை பரவல் அதிகரித்து வருகிறது.
5. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரேநாளில் 30 ஆயிரத்தை தாண்டிய தொற்று எண்ணிக்கை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.