உலக செய்திகள்

அமீரகத்தில், ஒரே நாளில் கொரோனாவால் 1,798 பேர் பாதிப்பு + "||" + In the United States, 1,798 people were affected by corona in a single day

அமீரகத்தில், ஒரே நாளில் கொரோனாவால் 1,798 பேர் பாதிப்பு

அமீரகத்தில், ஒரே நாளில் கொரோனாவால் 1,798 பேர் பாதிப்பு
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 56 ஆயிரத்து 181 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 1,798 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபுதாபி,

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 56 ஆயிரத்து 181 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 1,798 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 4 லட்சத்து 89 ஆயிரத்து 495 ஆக உயர்ந்தது. இதில் நேற்று மட்டும் 1,492 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,541 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 14 ஆயிரத்து 556 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி போட்ட ரஜினிகாந்த்
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகின்றனர்.
2. நடிகர் சென்ட்ராயனுக்கு கொரோனா
கொரோனா தொற்றில் நடிகர் நடிகைகள் தொடர்ந்து சிக்கி வருகிறார்கள். தற்போது பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் சென்ட்ராயனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,251 பேர் பாதிப்பு 22 பேர் சாவு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 1,251 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 22 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
4. தாம்பரம் நகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பால் 27 தெருக்கள் மூடல் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
தாம்பரம் நகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பால் 27 தெருக்கள் மூடப்பட்டு உள்ளன. தெருக்களை மூட எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தி்ல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,173 பேர் பாதிப்பு 32 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 2,173 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 32 பேர் பரிதாபமாக இறந்தனர்.