உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: அமீரகத்தில் இருந்து இந்தியா செல்பவர்களின் பயண திட்டம் ரத்து + "||" + Travel plan from the United States to India canceled

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: அமீரகத்தில் இருந்து இந்தியா செல்பவர்களின் பயண திட்டம் ரத்து

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: அமீரகத்தில் இருந்து இந்தியா செல்பவர்களின் பயண திட்டம் ரத்து
மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவின் ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. எனினும் அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் போது பயண விதிமுறைகளில் வழக்கமான கட்டுப்பாடு பின்பற்றப்பட்டு வருகிறது.

துபாய்,

குறிப்பாக இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் நேற்று முதல் 15 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடித்து வருவதால் துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் இருந்து மும்பை நகருக்கு செல்பவர்கள் தங்களது பயண திட்டத்தை ரத்து செய்துள்ளனர். இந்தியாவில் மராட்டியம், கேரளா, சத்தீஸ்கர், கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 70 சதவீதம் இருந்து வருகிறது.

அமீரகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் அவசர தேவை காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே தங்களது பயணத்தை அதிகமாக தொடர்ந்து வருகின்றனர். அடுத்த மாதம் (மே) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக அமீரகத்தில் இருந்து இந்தியா செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

கொரோனா பாதிப்பு காரணமாக பலர் தங்களது பயண திட்டத்தை மேற்கொள்ளாமல் ரத்து செய்து வருகின்றனர். விமான கட்டணங்களும் இந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். அதுபோன்ற அறிகுறிகள் எதுவும் தற்போது இல்லாமல் இருந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 638 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது.
2. 645 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 645 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
3. கொரோனாவுக்கு வாலிபர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். மேலும் 180 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. கொரோனா குறித்து பயமில்லை; ஊரடங்கு பற்றி கவலையில்லை
கொரோனா குறித்து பயமில்லை. ஊரடங்கு பற்றி கவலையில்லாமல் சாலைகளில் பொதுமக்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்
5. ‘கொரோனா பற்றிய அச்சத்தாலும் மக்கள் உயிரிழக்கின்றனர்’ - உத்தரபிரதேச மந்திரி
கொரோனா பற்றிய அச்சத்தாலும் மக்கள் உயிரிழப்பதாக உத்தரபிரதேச மாநில மருத்துவக் கல்வி மந்திரி சுரேஷ் கன்னா தெரிவித்தார்.