உலக செய்திகள்

ஈராக் ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல்; துருக்கி வீரர் பலி + "||" + Rocket attack on Iraqi military base; Turkey player killed

ஈராக் ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல்; துருக்கி வீரர் பலி

ஈராக் ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல்; துருக்கி வீரர் பலி
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.

அந்த தளத்தை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு 3 ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ராக்கெட், ராணுவ தளத்தை தாக்கியது. மற்ற இரு ராக்கெட்டுகளும் ஊருக்குள் போய் விழுந்தன.இந்த தாக்குதலில் துருக்கி வீரர் ஒருவர் பலியானார். ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது.இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஆனால் துருக்கி படைகள், ஈராக்கில் இருந்து கொண்டு குர்தீஷ் இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.எனவே துருக்கி படைகள் நடத்தி வருகிற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த தாக்குதலை குர்தீஷ் போராளிகள் நடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த குர்தீஷ் இன போராளிகளை துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


தொடர்புடைய செய்திகள்

1. மாங்காய் பறித்தபோது பரிதாபம் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி
மாங்காய் பறித்தபோது அருகில் இருந்த மின்சார ‘டிரான்ஸ்பார்மரில்’ கை உரசியதில் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
2. இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒரே நாளில் நேற்று 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் வேகமாக பரவும் தொற்று; ஒரேநாளில் 1,819 பேருக்கு கொரோனா பாதிப்பு; 18 பேர் பலியான பரிதாபம்
புதுவையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியானார்கள். 1,819 பேர் பாதிக்கப்பட்டனர்.
4. பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து பட்டா கத்தியால் தாக்கிய சிறுவன்; 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாப சாவு
பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் சிறுவன் புகுந்து பட்டா கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 9 பேர் சாவு; வீடுகள் சூறை; அமைதியை நிலைநாட்ட கவர்னர் வலியுறுத்தல்
மேற்கு வங்காளத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கு பிந்தைய வன்முறையில் 9 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன. அமைதியை நிலைநாட்டுமாறு கவர்னர் வலியுறுத்தி உள்ளார்.