உலக செய்திகள்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அரசுமுறை பயணமாக மெக்சிகோ செல்கிறார் + "||" + US VP Kamala Harris Planning First Trip Abroad To Mexico, 'Northern Triangle'

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அரசுமுறை பயணமாக மெக்சிகோ செல்கிறார்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அரசுமுறை பயணமாக மெக்சிகோ செல்கிறார்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அரசுமுறை பயணமாக மெக்சிகோ செல்ல உள்ளார்.
வாஷிங்டன்,

மெக்சிகோ வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர். இவர்கள், அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்த காலத்தில் மெக்சிகோ வழியாக அகதிகள் நுழைவதை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. 

ஆனால், ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின்னர் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, கவுத்தமாலா, எல் சல்வரார், ஹூண்ட்ராஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். 

இதனால், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் முகாம்கள் அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். ஆனாலும், அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இன்னும் சில நாட்களில் மெக்சிகோ செல்ல உள்ளார். அரசு முறையிலான இந்த பயணத்தில் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் நபர்களை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கமலா ஹாரிஸ் ஆலோசனை நடத்த உள்ளார். 

மேலும், இந்த பயணத்தின்போது கவுத்தமாலா, எல்-சல்வடார், ஹூண்ட்ராஸ் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் கமலா ஹாரிஸ் அகதிகள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.  அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற பின்னர் கமலா ஹாரிஸ் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து மீள இந்தியாவுக்கு உதவ கமலா ஹாரிஸ் சபதம்
கொரோனாவில் இருந்து இந்தியா மீள்வதற்கு அமெரிக்கா உதவ கமலா ஹாரிஸ் சபதம் பூண்டுள்ளார்.
2. ‘‘முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம்’’ ஐ.நா.வில் கமலா ஹாரிஸ் உரை
‘‘முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம்’’ ஐ.நா.வில் கமலா ஹாரிஸ் உரை.
3. இந்திய, அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும்; வெள்ளை மாளிகை கருத்து
துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ், பொறுப்பு ஏற்றது இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துகிறது என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறி உள்ளது.
4. கமலா ஹாரிஸ் பதவியேற்பு; துளசேந்திரபுரத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடிய கிராம மக்கள்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் இன்று பதயேற்கும் நிகழ்வை, அவரது தாயின் பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
5. தேர்தல் முடிவுகள் தொடர்பாக உயர் அதிகாரியிடம் டிரம்ப் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46–வது ஜனாதிபதியாக வருகிற 20–ந் தேதி பதவியேற்கிறார்.