போலீஸ்காரரை தாக்கியவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை துபாய் நீதிமன்றம் தீர்ப்பு


போலீஸ்காரரை தாக்கியவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை துபாய் நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 16 April 2021 10:53 AM GMT (Updated: 16 April 2021 10:53 AM GMT)

துபாயின் நைப் பகுதியில் உள்ள சாலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த 46 வயது நபர், நண்பர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். 46 வயது நபர் முக கவசம் அணியாமல் இருந்தார். அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் இதை கவனித்தார். உடனே அவர் அந்த நபரை நிறுத்தி விசாரித்தார். இதில், அவர் போலீசை தரக்குறைவாக பேசியதுடன், அவரை தாக்கவும் செய்தார்.

துபாய்,

துபாயின் நைப் பகுதியில் உள்ள சாலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த 46 வயது நபர், நண்பர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். 46 வயது நபர் முக கவசம் அணியாமல் இருந்தார். அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் இதை கவனித்தார். உடனே அவர் அந்த நபரை நிறுத்தி விசாரித்தார். இதில், அவர் போலீசை தரக்குறைவாக பேசியதுடன், அவரை தாக்கவும் செய்தார். மேலும் அவருடன் வந்த 32 வயது நண்பரும் போலீசை தரக்குறைவாக பேசினார். இதையடுத்து அந்த போலீஸ்காரர் 2 பேரையும் பிடித்து அதிரடியாக கைது செய்தார்.

மேலும் அவர்கள் மீது போலீஸ்காரர் துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், போலீசை தரக்குறைவாக பேசி, தாக்கிய குற்றத்திற்காக இருவருக்கும் தலா 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தண்டனைக் காலம் முடிந்த பின்னர் நாடு கடத்தவும் உத்தரவிட்டது.


Next Story