உலக செய்திகள்

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 62,606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Turkey logs 62,606 new coronavirus cases in 24 hours

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 62,606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 62,606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 62,606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்காரா, 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இதனைத்தொடர்ந்து துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் 2-வது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 62,606 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் துருக்கி நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,12,645 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 288 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 35,608 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 36,43,734 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 5,33,303 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அதிகரிப்பு: துருக்கியில் ஊரடங்கு அறிவிப்பு
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 37,312- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. துருக்கியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 61,028 பேருக்கு தொற்று உறுதி
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61,028 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. துருக்கியில் 5.44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா சிகிச்சை
துருக்கியில் இதுவாரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,68,447 ஆக உயர்ந்துள்ளது.
5. துருக்கியில் புதிதாக 61,400 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 297 பேர் பலி
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 61,400 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.