இந்தியாவுடனான விமானங்கள் அனைத்தையும் மே.3 வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக தகவல்


இந்தியாவுடனான  விமானங்கள் அனைத்தையும் மே.3 வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 18 April 2021 10:47 PM GMT (Updated: 18 April 2021 10:47 PM GMT)

உலக அளவில் ஒருநாள் ஏற்படும் கொரோனா பாதிப்பில் கடந்த சில வாரங்களாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 2.50 லட்சத்தை தாண்டி பதிவாகி இந்தியாவை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவுடனான அனைத்து இணைப்பு (கனெக்டிங்) விமானங்களையும் நாளை முதல் வரும் மே 3 ஆம் தேதி வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டுடனான விமான சேவைகளையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன

முன்னதாக, மும்பை - ஹாங்காங் இடையேயான விஸ்தரா விமானங்களை மே 2 ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்தது நினைவு கூரத்தக்கது. விஸ்தரா விமானத்தில் சென்ற பயணிகள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து விஸ்தாரா விமானங்களை ஹங்காங் அரசு தற்காலிகமாக ரத்து செய்தது. 


Next Story