உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை 20.94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல் + "||" + A total of 20.94 crore doses of corona vaccines have been reported in the United States so far

அமெரிக்காவில் இதுவரை 20.94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்

அமெரிக்காவில் இதுவரை 20.94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 20.94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. தற்போது ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன்&ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம்  20,94,06,814 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 17 ஆம் தேதி வெளியான தகவலின்படி மொத்தம் 20,58,71,913 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நாட்டின் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு அதிக அலவிலான மக்களுக்கு மருத்தை கொண்டு சேர்க்க முயன்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
2. குஜராத் மாநிலத்திற்கு மேலும் 8.98 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்
குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு இதுவரை 1.39 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. கொரோனா தடுப்பூசி: காப்புரிமையில் இருந்து விலக்கு அளிக்க ஜெர்மன் எதிர்ப்பு
காப்புரிமை விலக்கு அளிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் பரிந்துரை ஒட்டுமொத்த தடுப்பூசி உற்பத்தியில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தும் என ஜெர்மன் கூறியுள்ளது.
4. அமெரிக்கா செல்லும் ரஜினி?
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
5. தடுப்பூசி காப்புரிமை விலக்கம்; இந்தியா முன்மொழிந்த திட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு; தடுப்பூசி வினியோகம் அதிகரிக்கும்
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூசி காப்புரிமை விலக்கத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.